பொய்யன் முஜாஹிது இப்னு ரஸீனும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் உலமாக்களின் மீது அவருடைய பொய்களும் - பாகம் 1
பொய்யன் முஜாஹிது இப்னு ரஸீனும் அஹ்லுஸ் ஸுன்னாஹ் உலமாக்களின் மீது அவருடைய பொய்களும் - பாகம் 1
அன்பார்ந்த தமிழ் பேசும் முஸ்லிம் சகோதர சகோதரிகளே!
முஜாஹிது இப்னு ரஸீன் என்பவர் தமிழுகில் தன்னை ஒரு ஸலஃபி கொள்கயில் இருக்கும் பேச்சாளராக நிறுவிக்கொண்டவர் ஆவார். தான் மன்ஹஜுஸ் ஸலஃபில் இருக்கும் அழைப்பாளராக காட்டிக் கொண்டு அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் பல அடிப்படைகளை மறுத்து, அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்கள் மீது பொய்யுரைக்கிறார்.
பொய் 1 - ஆடியோ பதிவை கேட்க இங்கு க்ளிக் செய்யவும்
மேற்கண்ட ஆடியோ பதிவில் முஜாஹிது இப்னு ரஸீன் அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் அடிப்படைகளை குறித்து தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பொய்யரிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்! அபு தர்தா அவர்கள் கூறியது போல, “அல்லாஹ் நமக்கு இரண்டு காதுகளை கொடுத்தது கவனத்தோடு அதிகமாக செவிமடுக்கவும் குறைவாக பேசவும் தான்” என்ற அடிப்படையில் முஜாஹிது இப்னு ரஸீனின் வார்த்தையை நன்கு கவனியுங்கள்.
இந்த பொய்யர் கூறுகிறார்:
“உலமாக்கள் மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு புதுப் புது கருத்துக்களை உருவாக்குவார்கள் அவ்வாறான ஒரு கருத்து தான் இந்த ஸில்ஸிலா (இஸ்னாது)”.
முஜாஹிது இப்னு ரஸீன் பொதுவாக உலமாக்கள் இவ்வாறான யுக்தியை கையாண்டு தான் அவரை ஒரு ஆலிமாக மக்களிடத்தில் காட்டிக் கொள்வார் என்று கூறுகிறார். இது உலமாவுஸ் ஸுன்னாஹ் மீது இவர் கூறும் ஒரு அப்பட்டமான பொய்யாகும்.
உண்மையில் மக்களை தன்னிடம் உள்ள திறமையை காட்டி வசப்படுத்துவது என்பது முஜாஹிதுடைய வழிமுறையாகும். இவர் தன்னுடைய பேச்சாற்றலால் தமிழ் பேசும் மக்களை மயக்கி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு திறமையை காண்பித்து மக்களை ஈர்ப்பது தான் இலங்கையில் உள்ள உலமாக்கள், குறிப்பாக அஷ்-ஷெய்க் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் அவர்களின் வழிமுறையாகக் கூறுகிறார். ஆனால் இது ஒரு அப்பட்டமான பொய்யாகும். தன்னை படித்த ஒரு ஆலிமாக தமிழ் பேசும் மக்களிடத்தில் காண்பிப்பதற்கு இவர் ஒரு வழிமுறையை கையாளுகின்றார்.
ஸில்ஸிலா என்பது அஹ்லுஸ் ஸுன்னாஹ்வின் ஒரு மிக முக்கியமான அடிப்படைகளில் ஒன்றாகும். இதை குறித்து முஜாஹிது இப்னு ரஸீன் எப்படி பொய்களை அள்ளி வீசுகிறார் என்பதை காண்போம்:
முஜாஹிது இப்னு ரஸீன் கூறுகிறார்:
“ஸில்ஸிலா என்பது மக்களை தன் வசப்படுத்த உலமாக்களால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒரு யுக்தியாகும்”
முதலில், உலமாவுஸ் ஸுன்னாஹ்வும், கல்வி தேடக்கூடிய தாலிபுல் இல்முகளும் இந்த கூற்றிலிருந்து முஜாஹிதுக்கு மார்க்கத்தின் அடிப்படை தெரியவில்லை என்பதை விளங்கிடுவார்கள்.
قَالَ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ رَحِمَهُ اللَّهُ: الْإِسْنَادُ مِن الدِّينِ، وَلَوْلَا الْإِسْنَادُ لَقَالَ مَنْ شَاءَ مَا شَاءَ
அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
“இஸ்னாது மார்க்கத்தின் ஒரு அங்கமாகும். இந்த் இஸ்னாது மட்டும் இல்லையென்றால் யார் வேண்டுமானலும் (இந்த மார்க்கத்தின் பெயரில்) எதை வேண்டுமானலும் கூறிவிடுவார்” (ஸஹீஹ் முஸ்லிம் முன்னுரை)
إن هذا العلم دين فانظروا عمن تأخذوا دينكم
இமாம் முஹம்மது இப்னு ஸிரீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
“நிச்சயமாக இந்த கல்வி என்பது மார்க்கமாகும். நீங்கள் யாரிடமிருந்து உங்கள் மார்க்கத்தை எடுக்கின்றீர்கள் என்பதின் எச்சரிக்கையுடன் இருங்கள்” (ஸஹீஹ் முஸ்லிம் முன்னுரை)
ஸில்ஸிலா என்பது மார்க்கத்தின் ஒரு அங்கமாகும். அது தான் ஸலஃபுகளின் வழிமுறையாகும். மக்களாகிய நாம் இந்த ஸலஃபுகளின் (ஸஹாபா, தாபியீன், தபஅ தாபியீன்களின்) பாதையை பின்பற்றுவது கடமையாகும். இந்த பாதையை தவிர்ப்பவர்கள் அனைவரும் வழிகேட்டில் செல்லக்கூடியவர்கள் ஆவர். (அஷ்-ஷெய்க் அல்-அல்பானியின் “ஹாதிஹி த’வத்துனா” என்ற உரையை பார்க்கவும்). ஆனால் முஜாஹிது இப்னு ரஸீன் இந்த ஸில்ஸிலா என்ற அடிப்படையை மக்களிடத்தில் உலமாக்கள் பயன்படுத்தும் ஒரு புது யுக்தியாக சித்தரிக்கிறார்.
ஸில்ஸிலா என்ற ஒரு அடிப்படை இல்லையென்றால் ஒரு மனிதன் எத்தி வைக்கும் மார்க்கத்தின் உண்மைத்தன்மைக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இஸ்னாது பெற்றுக் கொள்ளாத ஒரு மனிதனிடமிருந்து நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை எடுக்க முடியாது. ஒருவர் தான் கொண்ட கல்வி சரிதான் என்று கல்வி சுமந்த உலமாக்களிடமிருந்து அதன் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தி சிபாரிசு பெற வேண்டும்.
இரண்டாவதாக, அல்லாஹ்வின் தூதருடைய ஸுன்னாஹ்வின் வழிமுறையில் கல்வி கற்பதையும் அதை எத்திவைப்பதையும் மறுக்கின்றார் என்பதை முஜாஹிது இப்னு ரஸீன் தன்னுடைய கூற்றிலிருந்து தெரிவிக்கின்றார்.
முஆவியா இப்னு அபி ஸுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
மக்களே! கல்வி என்பது (ஓரு ஆலிமிடமிருந்து) கற்பதனால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் (அதைத் தவிர முடியாது) ஃபிக்ஹு (மார்க்க விளக்கம்) என்பது (ஒரு ஆலிமால்) விளக்கப்படுவதனால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் (அதைத் தவிர முடியாது). அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு இந்த மார்க்கத்தின் விளக்கத்தை கொடுக்கின்றான், இன்னும் அல்லாஹ்வின் அடிமைகளில் உலமாக்கள் தான் அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் ஆவர். என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் எப்பொழுதுமே சத்தியத்தில் வெளிரங்கமாக மக்களுக்கு மத்தியில் இருப்பார்கள், அவர்களை மற்றவர்கள் புறக்கணிப்பதால் அவர்களுக்கு ஒரு குறையும் நேராது அல்லாஹ்வின் ஏவலான கியாமத் நாள் வரும் வரையில். (முஸ்னது அஷ்-ஷாமியீன்)
எனவே கல்வியை உலமாக்களிடம் அமர்ந்து கற்காமல் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை மேற்கணட ஹதீஸ் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மேலும், அவ்வாறு கல்வியை பெற்றுக் கொள்ளாமல் அதனை எத்தி வைக்க முடியாது.
இப்பொழுது இந்த பொய்யர் முஜாஹிது இப்னு ரஸீனிடம் நாங்கள் கேட்கிறோம்,
எங்கிருந்து உங்களுடைய மார்க்கத்தை எடுக்கின்றீர்கள்? யாரிடமிருந்து சுமந்த வழிமுறையை பொது மக்களுக்கு மத்தியில் பரப்புகிறீர்கள்? உங்களுடைய கல்வியையும் நீங்கள் வைக்கும் வாதங்களையும் எந்த அஹ்லுஸ் ஸுன்னாஹ் அறிஞர்கள் சரிகண்டு அனுமதித்தனர்?
மார்க்கத்தின் எந்த ஒரு அடிப்படையையும் சரியான வழிமுறையில் கற்காமல் முஜாஹிது இப்னு ரஸீன் முஸ்லிம் பொதுமக்களை குழப்புகிறார்.
மூன்றாவதாக, எவர் ஒருவருக்கு கல்வி பெற்றுக் கொள்ளும் வழிமுறை தெரியவில்லையோ, அவரால் கல்வி சுமக்க முடியாது மேலும் அவர் ஆலிமாகவோ அல்லது தா’யீ (அழைப்பாளராகவோ) ஆக முடியாது என்பதை நாம் உணர வேண்டும். முஜாஹிது இப்னு ரஸீன் ஸுன்னாஹ்வையும், ஸஹாபாக்களின் வழிமுறையையும் மறுக்கின்றார். உலமாக்களுடைய உபதேசங்களை பற்றிப்பிடிக்குமாறும், இவரைப் போன்று ஃபித்னா உருவாக்கும் பொய்யர்களை விட்டு ஒதுங்குமாறும் முஸ்லிம்களுக்கு உபதேசிக்கின்றோம்.
இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் கல்வியானது நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களிடமிருந்தும் ஸஹாபாக்களிடமிருந்தும் அந்த கல்வியை சுமந்த உலமாக்களிடம் தான் உள்ளது. இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்:
அப்துல்லாஹ் இப்னு அம்ர் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கூறினார்கள்:
“நிச்சயமாக அல்லாஹ் கல்வியை தன்னுடைய அடியார்களிடமிருந்து (அவர்களின் இதயத்திலிருந்து அவ்வாறே) கைப்பற்றி விடமாட்டான் மாறாக உலமாக்களை கைப்பற்றுவதன் மூலம் (அவர்களின் மரணத்தின் மூலம்) கல்வியை கைப்பற்றி விடுவான் எதுவரை ஒரு ஆலிம் கூட மீதம் இல்லாமல் இருக்கும் நிலையில் மக்கள் அறிவீனர்களை தங்களுடைய தலைவர்களாக (மார்க்க விஷயங்களுக்கு) எடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் (அந்த அறிவீனர்களிடம் மார்க்க விஷயங்கள்) கேட்கப்பட்டால் கல்வி இல்லாமல் மார்க்கத் தீர்ப்புகளை வழங்கிவிடுவார்கள். அவர்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுப்பார்கள்” (ஸஹீஹ் அல்-புகாரீ: 100)
இந்த குர் ஆன் மற்றும் ஸுன்னாஹ்வின் கல்வியை உலமாக்கள் சுமந்துள்ளார்கள். எனவே, அதனை அவர்களிடம் அமர்ந்து கற்றுக்கொண்டால் மட்டும் தான் பெற்றுக் கொள்ள முடியும். இந்த மார்க்கத்தின் விளக்கத்தை அவர்களுடைய சபைகளில் அமர்ந்தால் மட்டும் தான் நாம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த நபிவழியில் மார்க்கக் கல்வியை தேடுவதும் கல்வி சுமந்தவர்களை உம்மத்திற்கு பரிந்துரைப்பதும் பொது மக்களை ஆதாரப்பூர்வமான கல்வியின்பால் வழிகாட்டுவதற்காகும்.
பின்வரும் ஆதாரங்கள் வாசகர்களுக்கு இந்த பாடத்தில் ஆழமான புரிதலை தரும். மேலும், தமிழ் பேசும் உலகிலும், மற்ற பகுதிகளிலும் ஸலஃபி உலமாக்களின் சபைகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டவர்களும், சுயமாக மார்க்கத்தை படித்துக் கொண்டு அழைப்புப் பணி செய்பவர்களும் கூறும் பொய்களை இந்த ஆதாரங்கள் வெளிச்சமிட்டு காட்டும்.
ஸஹாபாக்களின் வழிமுறையை எடுத்துக்காட்டும் ஆதாரங்கள்
ஸில்ஸிலா அல்லது இஸ்னாது என்பவை மார்க்கத்தின் அடிப்படை என்பதையும், ஒரு அழைப்பாளர் அழைப்புப் பணிக்கு இறங்கும் முன் அதை பெற்றிருக்க வேண்டும் என்பதை நிரூபித்தோம். இப்பொழுது, ஸஹாபாக்களும் இந்த தஸ்கியா என்னும் பரிந்துரை செய்யும் ஸுன்னாஹ்வை கல்வி தேடுவதற்கும், அதை கற்றுப் கொடுப்பதற்கும் செயல்பட்டார்கள் என்பதற்கான ஆதாரங்களை காண்போம்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
ஸஹாபாக்களிடமிருந்தும் அவர்களில் உள்ள மூத்தவர்களிலிருந்தும் கல்வியை பெற்றுக் கொள்ளும் வரையில் மக்கள் நலவிலேயே இருப்பார்கள். மாறாக கல்வியை சிறார்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொழுது தான் அவர்கள் நாசமாகுவார்கள். (இப்னு அப்துல் பர் அவர்களின் ஜாமிஃ பயான் அல்-இல்ம் வ ஃபத்லிஹி 1060)
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாக அறிவிக்கப்படுவது:
அல்லாஹ்வின் தூதருடைய மறைவிற்கு பின்னால் நான் அன்ஸாரிகளிலிருந்து ஒரு மனிதனிடம் கூறினேன், “வாருங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லாம் அவர்களின் தோழர்களிடத்தில் கேட்டு (படித்துக்) கொள்வோம் ஏனென்றால் அவர்களில் அதிகமானோர் இன்று இருக்கின்றனர்…..” (அறிவித்தலின் ஒரு பகுதி) (ஸுனன் அத்தாரிமீ 2:129)
அலி இப்னு ஹுஸைன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மஸ்ஜிதிற்குள் நுழைந்து மக்களை தாண்டிச் சென்று சைது இப்னு அஸ்லம் அவர்களின் சபையில் அமருவார்கள். நாஃபிஃ இப்னு ஜுபைர் அவரிடம் கூறினார்கள்: “அல்லாஹ் உங்களை மன்னிக்கட்டும், நீங்கள் மக்களின் தலைவராக இருக்கின்றீர்கள் ஆயினும் இந்த மக்களை கடந்து வந்து இந்த அடிமையிடம் அமருகிறீர்கள்”. அதற்கு அலி இப்னு ஹுஸைன் கூறினார்கள்: “கல்வி என்பது அது எங்கிருந்தாலும் தேடி வந்து பெற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்” (இமாம் அத்-தஹபியின் ஸியர் அஃலாம் அந்-நுபலா 4:388)
ஸஹாபா மற்றும் தாபியீன்கள் அடுத்த தலைமுறை மக்கள் கற்றுக் கொள்வதற்காக செய்த பரிந்துரைகளும் சிபாரிசுகளும்:
இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
அல்-குர்ஆனிற்கு விளக்கமளிப்பவர் இப்னு அப்பாஸ் ஆவார்.(தஃப்ஸீர் இப்னு கஸீர் 1/8)
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஸயீது இப்னு அல்-முஸய்யிபு முஃப்திகளில் ஒருவர் ஆவார். (தத்கிரத்துல் ஹுஃப்ஃபாழ் (1/44))
கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
ஸயீத் இப்னு அல்-முஸய்யிபை விடவும் (மார்க்கக் கல்வியை) அறிந்தவர் யாரையும் நான் கண்டதில்லை (தத்கிரத்துல் ஹுஃப்ஃபாழ் (1/44))
அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது: “எப்பொழுது ஒரு மனிதன் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தகுதியை அடைவான்?”. அதற்கு அப்துல்லாஹ் இப்னு முபாரக் கூறினார்கள்: “அறிவிப்புகளை (ஹதீஸ் மற்றும் ஸலஃபுகளின் அஸர்களை) பற்றிய கல்வியும் ஃபிக்ஹ் கருத்துக்களில் ஆழமான அறிவும் இருக்கும் பொழுது” (இப்னு அப்துல் பர் அவர்களின் ஜாமிஃ பயான் அல்-இல்ம் வ ஃபத்லிஹி 1529)
இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஸில்ஸிலா அல்லது தஸ்கியா என்பது மார்க்கத்தின் அடிப்படை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இந்த ஸில்ஸிலா இல்லாமல் ஒரு மனிதன் தான் விரும்பியதை கூறி மக்களை வழிகெடுக்க முடியும். முஜாஹிது இப்னு ரஸீன் இவ்வனைத்து அடிப்படைகளையும் இழிவாக்கி பொது மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார். மேலும் ஸுன்னாஹ்வின் உலமாக்களை அடையாளம் காண்பதில் அவரே தடுமாற்றத்தில் இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சின் பிற்பகுதியில் காணலாம். அதையும் பின்வரும் கட்டுரைகளில் தெளிவுபடுத்துவோம் இன் ஷா அல்லாஹ்.
நாம் இங்கு கொடுத்த ஆதாரங்களே சத்தியத்தை தேடும் உள்ளங்களுக்கு போதுமான சாட்சியங்களாக இருக்கும். நம்முடைய முஸ்லிம் சமுதாயம் இந்த மார்க்கத்தின் இந்த அடிப்படைகளில் எவ்வளவு தூரம் அறியாமையில் உள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இதனை இன்னும் இலகுவாக விளங்குவதற்கு சில கூற்றுகளை காண்போம்:
ஸுலைமான் இப்னு மூஸா (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
ஸுஹுஃபிய்யூன்களிடமிருந்து (புத்தகத்திலிருந்து மட்டும் நேரடியாக கல்வியை படிப்பவர்களிடமிருந்து) ஹதீஸை எடுக்காதீர்கள் இன்னும் அல்-குர்ஆனின் கிராஅத்தை (ஓதுதலை) முஸ்ஹஃபியீன்களிடமிருந்து (அல்-குர்ஆனின் கிராஅத்தை புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டவர்களிடமிருந்து) எடுக்காதீர்கள்” (அல்-ஜரஹ் வ தஃதீல் இமாம் இப்னு அபி ஹாதிம் 2/31)
அல்-வலீது இப்னு முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
ஸுஹுஃபிய்யூன்களிடமிருந்து (புத்தகத்திலிருந்து மட்டும் நேரடியாக கல்வியை படிப்பவர்களிடமிருந்து) ஹதீஸை எடுக்காதீர்கள் இன்னும் அல்-குர்ஆனின் கிராஅத்தை (ஓதுதலை) முஸ்ஹஃபியீன்களிடமிருந்து (அல்-குர்ஆனின் கிராஅத்தை புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டவர்களிடமிருந்து) எடுக்காதீர்கள். (கல்வியை ஒரு ஆலிமிடம்) செவிமடுத்து கற்றவரிடமிருந்து தவிர (நீங்கள் எடுக்க வேண்டாம்) மேலும், முறையாக (ஒரு ஆலிமிடமிருந்து) கிராஅத்தை கற்றவரிடமிருந்து ஓதுதலை கற்றுக் கொள்ளுங்கள்” (தாரீக் அத்-திமஷ்க் 63/292)
எனவே யாரெல்லாம் கல்வியை சுயமாக புத்தகங்களிலிருந்து படித்து அதனை பிரச்சாரம் செய்ய வருவார்களோ, அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்த அறிவித்தல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அவர்களிடம் கல்வியை தேடுவது கூடாது ஏனென்றால் அவர்களுடைய மார்க்கக் கல்வியின் புரிதலும், ஆதாரங்களை செயல்படும் வழிமுறையும் உலமாக்களால் அங்கீகரிப்பட்டதல்ல. (இது எவ்வாறு என்றால் அறுவை சிகிச்சை நிபுணரிடம் முறையாக பயிற்சி பெறாமல் நேரடியே அறுவை சிகிச்சை செய்ய வந்தவரிடம் நாம் பயன்பெற முடியுமா?)
புத்தகத்திலிருந்து வாசித்து கல்வியை சுமக்க முடியும் என்ற பொய் பிரச்சாரத்தை நம் முஸ்லிம் மக்கள் உணர்ந்து அதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டும். நாம் மேலே குறிப்பிட்ட ஆதாரங்கள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். பின்வரும் கேள்விகள் உங்களை இந்த விஷயத்தில் பரப்பப்படும் பொய்களை குறித்தும், தவறான கருத்துக்களை குறித்தும் சிந்திக்க வைக்கும்.
ஏன் இமாம் அஷ்-ஷ’அபீ அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் 500 ஸஹாபாக்களுக்கு மேல் சந்தித்தார்கள்? (ஆதாரம் - தத்கிரத்துல் ஹுஃப்ஃபாழ்)
இமாம் மாலிக் அவர்களின் முவத்தாவை முழுமையாக மனனம் செய்த பின்னும் ஏன் இமாம் ஷாஃபியீ அவர்கள் இமாம் மாலிக்கிடம் படிக்க சென்றார்கள்? (ஆதாரம் - ஸியர் அஃலாம் அந்-நுபலா)
முஃதஸிலா என்ற வழிகெட்ட பிரிவு எவ்வாறு தோன்றியது? வாஸில் இப்னு அதா’ தன்னை இமாம் ஹஸன் அல்-பஸரீ அவர்களின் சபைகளிலிருந்து தூரமாக்கிக் கொண்டு வழிகெட்ட முஃதஸிலா என்ற கூட்டத்தை ஆரம்பித்தார்.
ஏன் இமாம் மாலிக் அவர்கள் ஃபத்வா வழங்குவதற்கு முன் தன்னை தடுத்துக் கொண்டார்கள்? அவர்களுடைய ஆசிரியர்களில் 70 பேர் அவருக்கு இஜாஸா (அனுமதி) அளிக்காமல் இமாம் மாலிக் ஃபத்வா கொடுக்கவில்லை (ஆதாரம் - ஸியர் அஃலாம் அந்-நுபலா)
ஏன் இமாம் புகாரி மற்றும் இமாம் முஸ்லிம் அவர்கள் தங்களுடைய ஹதீஸ் தொகுப்புகளை அவர்களுடைய ஆசிரியர்களிடம் காண்பித்தனர்? அவர்களிடமிருந்து தஸ்கியா பெறவில்லையா? இந்த உலமாக்களின் வரலாறுகளை நாம் படிக்கவில்லையா?
தற்காலத்தில் வாழ்கின்ற முற்காலத்தில் வாழ்ந்த பல உலமாக்களுடைய ஆசிரியர்களை நாம் காணவில்லையா? உலமாக்களின் வரலாறுகளில் அவர்கள் கற்றறிந்த ஆசிரியர்களின் பட்டியலையும், அவர்கள் கற்றுக் கொடுத்த மாணவர்களின் பட்டியல்களையும் நீங்கள் காணலாம்.
ஹதீஸ் உலமாக்களான அல்லாமா முஹம்மது அப்துர் ரஹ்மான் முபாரக்ஃபூரி, அல்லாமா பதீ’ அத்-தீன் அர்-ராஷிதி அஸ்-ஸிந்தி, அல்லாமா முஹம்மது இப்னு அலி ஆதம் அல்-எதியோப்பி, அல்லாமா யஹ்யா இப்னு யஹ்யா அல்-முதர்ரிஸ் அல்-முபாரக்ஃபூரி போன்ற பேரஞியர்கள் அனைவரும் தங்களுடைய மாணவர்களுக்கு இஜாஸா வழங்கியுள்ளார்கள்.
அல்லாமா முஹம்மது இப்னு அப்துர்ரஹ்மான் அல்-முபாரக்ஃபூரி (இறப்பு -1353ஹி) அவர்கள் அஷ்-ஷெய்க் அபுல் ஹஸன் உபைதுல்லாஹ் அர்-ரஹ்மானி என்கிற தன்னுடைய மாணவருக்கு தன்னுடைய நூல்களையும், இமாம் புகாரீ, முஸ்லிம், திர்மிதி போன்ற அறிஞர்கள் தொகுத்த ஹதீஸ் கிரந்தங்களையும் அறிவிப்பாளர் தொடருடன் அறிவிப்பதற்கும் படித்துக் கொடுப்பதற்கும் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
அஷ்-ஷெய்க் ரபீ இப்னு ஹாதி அவர்கள் அஷ்-ஷெய்க் அபுல் ஹஸன் உபைதுல்லாஹ் அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்க இஜாஸா கோரினார்கள் பின்பு அதை பெற்றுக் கொண்டார்கள். அதே போன்று அஷ்-ஷெய்க் ரபீ அவர்களுக்கு இமாம் பதீஃ அத்தீன் அர்-ராஷிதி அஸ்-ஸிந்தி அவர்களிடமிருந்தும் இஜாஸா உள்ளது.
எனவே, இஜாஸா அல்லது ஸில்ஸிலா என்பது அஷ்-ஷெய்க் யஹ்யா ஸில்மி அவர்களோ அல்லது மற்ற உலமாக்களோ உருவாக்கிய புதிய கருத்து அல்ல. மாறாக ஸில்ஸிலா அல்லது இஜாஸா என்பது மார்க்கத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். பொய்யர் முஜாஹிதிற்கும் அவரை பின்பற்றுபவர்களுக்கும் தான் இது புது விஷயமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் சரியான புரிதலின் பால் வழிகாட்ட வேண்டும் என்றும் குழப்பங்களிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேற்கூறப்பட்டுள்ள ஆதாரங்களை கொண்டு வாசகர்கள் ஸில்ஸிலா என்ற அடிப்படை ஸஹாபாக்களும் அவர்களை பின்தொடர்ந்தவர்களும் பின்பற்றிய மார்க்க அடிப்படை என்பதை புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
முஜாஹிது இப்னு ரஸீன் போன்று அறியாமையில் உள்ள அழைப்பாளர்கள் அல்லாஹ்வை பயந்து, உலமாக்கள் மீது அவதூறுகளையும், பொய்களையும், பரப்பியதற்காகவும் முஸ்லிம்களை குழப்பத்தில் ஆழ்த்தியதற்காகவும் தவ்பா செய்ய வேண்டும்.
ஸலஃபுகள் கூறுவார்கள்: “ஒரு ஆலிம் பேசினால் கல்வி பரவலாகும் ஆனால் ஒரு மடையன் பேசினால் ஃபித்னா பரவலாகும்”
அல்லாஹ் நம் அனைவரையும் பொய் பிரச்சாரங்களிலிருந்து காப்பாற்றி இந்த மார்க்கதின் மீதும், அதன் உண்மையான புரிதல்களின் மீதும் உறுதியாக ஆக்க வேண்டும். இன்னும் குறிப்பாக குழப்பவாதிகள் மற்றும் வழிகெட்ட அழைப்பாளர்களின் தாக்கதினால் உலமாவுஸ் ஸுன்னாஹ்வை விட்டு தூரமாக இருக்கும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்காக துஆ செய்கின்றோம். இவ்வாறான பொய்யர்கள் செய்யும் பிரச்சாரத்தை கண்டு அமைதிகாக்கும் அறிஞர்களும் அழைப்பாளர்களும் அவர்களுடைய பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை எடுத்துக் காட்டுகிறது. அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்!
இத்துடன் முஜாஹிது இப்னு ரஸீன் கூறிய முதல் பொய்யை இங்கு வெளிச்சமிட்டு காட்டி அதனை தெளிவுபடுத்தியுள்ளோம். மற்ற பொய்களும் இங்கு தெளிவாக்கப்படும் இன் ஷா அல்லாஹ். தொடர்ந்து இணைந்திருங்கள்…
அஷ்-ஷெய்க் யஹ்யா ஸில்மி ஹஃபிழஹுல்லாஹ் அவர்களின் மேற்பார்வையில் வெளியிடப்படுகிறது.
Comments
Post a Comment